தமிழக சரித்திரத்தில் மாபெரும் தலைவர் கருணாநிதி: டி.ராஜா பேட்டி

தமிழ்நாட்டின் சரித்திரத்தில் மாபெரும் தலைவர் கருணாநிதி உடல் நலம் தேர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.ராஜா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் தலைவர் கருணாநிதி உடல் நலம் தேர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் ராஜ்ய சபா எம்பியுமான டி.ராஜா கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று முன் தினம் இரவு மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவருடைய உடல் நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டது.

CPI’s Secretary D.Raja says, Karunanidhi the great leader in history of Tamilnadu

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்தார்.

பின்னர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது: நண்பர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, மற்றும் திமுகவின் முன்னணித் தலைவர்களிடம் விசாரித்தேன். அவருடைய உடல் நலம் ஸ்திறமாக இருக்கிறது என்று சொன்னார்கள். அவருடய உடல் நலம் தேற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகயின் நல் விருப்பங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருணாநிதி தமிழ்நாட்டின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் தலைவர். தமிழ்நாட்டின் சரித்திரத்தை வென்றவர் என்றுகூட நாம் சொல்ல முடியும். ஒரு புதிய சரித்திரத்தை படைத்தவர் என்றும் சொல்ல முடியும். சரித்திரமாகவே மாறியவர் என்றும் நாம் சொல்ல முடியும்.

தமிழ் மொழிக்காகவும் சமூக நீதிக்காகவும் மாநில உரிமைக்காகவும் தொடர்ந்து போராடிய வீரர் கருணாநிதி. அவர் உடல் நலம் தேர வேண்டும். அவர் நல்ல உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்." என்று டி.ராஜா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+