வகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்
வகுப்புவாத சக்திகளை இந்தியா முழுவதும் முறியடிக்க இடதுசாரிகள் உழைப்பார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவை : வகுப்புவாத சக்திகளை இந்தியா முழுவதும் முறியடிக்க கம்யூனிஸ்ட்டுகள் எந்தவித சமரசமுமின்றி பாடுபடுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதன் பிறகு முத்தரசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா முழுவதும் வகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் சரியாகவும், எந்த வித சமரசமின்றியும் போராடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வகுப்புவாத சக்திகளைத் தோற்கடிக்க மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளை, ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உழைக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட தவறான பொருளாதார நடவடிக்கைகளால் மத்திய பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தை சிதைத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால் தொழில்நகரங்களான திருப்பூர், கோவை ஆகியவை கடும் பாதிப்படைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர் என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications