மத்திய அரசால் கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்.. ஜி. ராமகிருஷ்ணன் சாடல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சனையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யவும் என நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடந்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளை தொடர்ந்து உதாசீனப்படுத்திவருகிறது.
மத்திய அரசும் நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்குவதில் உறுதிகாட்டவில்லை. இதுவரை, தமிழக பாஜக தலைவர்கள், மேலாண்மை வாரியம் ஏற்படுத்த நீதிமன்றத் தடை இருப்பதாக தவறான முறையில் பிரச்சாரம் செய்து வந்தனர். உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியதுடன், மேலாண்மை வாரியம் ஏற்படுத்துவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்தது. தமிழகம், புதுச்சேரி தனது தரப்பு நிபுணர்களை பரிந்துரைத்துள்ளன, நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க மாட்டோம் என்று தொடர்ந்து பேசிவரும் கர்நாடகம், தனது தரப்பு நிபுணரையும் பரிந்துரைக்கவில்லை.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதிடுகிறது. அதற்காக சொல்லப்பட்டிருக்கும் காரணம் ஏற்புடையதல்ல. நடுவர் மன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பைத்தான், உச்ச நீதிமன்றம் அமலாக்க வலியுறுத்தியதென்ற நிலையில், இப்பிரச்சனையில் இனியும் தாமதிப்பதானது கூட்டாட்சி முறை மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் செயலாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக, அரசு அரசியல் கடந்து செயல்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications