Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையிலும் போராடிய பெண்களின் உடைகளை களைந்து காவல்துறை அக்கிரமம்: சிபிஎம் கடும் கண்டனம்

சென்னையை போல மதுரையிலும் போலீசார் இடதுசாரி போராட்டகாரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு எதிராக மதுரையிலும் போராடிய பெண்களின் உடைகளைக் களைந்து காவல்துறை கொடூரமாக நடந்து கொண்டதற்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய பாஜக அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறு-குறுந்தொழில், வணிகம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய மோடி அரசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து வாலிபர், மாணவர் இயக்கங்கள் சார்பில் டிசம்பர் 31 அன்று சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற கண்டன இயக்கத் தின் போது பள்ளிக்கரணை காவல்துறையினர் கண்டன இயக்கத்தில் பங்கெடுத்தவர்கள் மீது தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். இளம் பெண்கள் மீது பாலியல் ரீதியான சீண்டல் களோடு வன்முறைத் தாக்குதலும் தொடுக்கப் பட்டது.

மதுரை போராட்டம்

மதுரை போராட்டம்

கைது செய்யப்பட்டு காவலில் இருந்தவர்கள் கொடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பொய் வழக்கு புனையப்பட்டு மருத்துவ சிகிச்சையின்றி படுகாயமடைந்த நிலையில் 14 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அத்துமீறலையும், மனித உரிமைமீறலையும் கண்டித்தும், மத்திய அரசின் செல்லா நோட்டு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கண்டித்தும் மதுரையில் செவ்வாயன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கண்டன இயக்கம் நடைபெற்றுள்ளது.

கண்டனம்

கண்டனம்

அமைதியாக இயக்கம் நடத்திய இளைஞர்களையும், பெண்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து, ஆண் - பெண் என பாராது போலீஸ் வாகனத்தில் அனைவரையும் தூக்கியெறிந்துள்ளனர். காவல்துறையின் இந்த அநாகரீக அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பெண்கள் உடைகளை களைந்து...

பெண்கள் உடைகளை களைந்து...

சென்னை பள்ளிக்கரணையில் நடந்தது போல், மதுரையிலும் போலீஸ் காவலில் இருந்த இளைஞர்கள் மீதும், பெண்கள் மீதும் குண்டாந் தடிகளைப் பயன்படுத்தி கொடுந்தாக்குதல் வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். மயங்கிவிழும் நிலையிலும் பெண்களின் உடைகளைகளைந்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்.

வெறியாட்டம்...

வெறியாட்டம்...

இதில் மாதர் சங்கத் தலைவர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், ஈஸ்வரி, மலர்விழி மற்றும் சில இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சார்லஸ் எனும் இளைஞனை சுற்றிநின்று காவல்துறையினர் குண்டாந்தடிகளால் தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பொய்வழக்கு...

பொய்வழக்கு...

போலீஸ் காவலில் இருந்தவர்களை சுற்றி வளைத்து நான்கு சுவர்களுக்குள் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனம் சட்டத் திற்குப் புறம்பானது மட்டுமல்ல - மனித உரிமைகளுக்கே எதிரானதாகும். இத்தனையையும் அரங்கேற்றிய காவல்துறையினர் சார்லஸ் மீது பொய்யான வழக்கை புனைந்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையின் அராஜகம்

காவல்துறையின் அராஜகம்

பாஜக அரசின் செல்லா நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன்னிறுத்தி கண்டன இயக்கம் நடத்துவதற்கு கூட தமிழகத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்படும் நிலையும், கண்டன இயக்கம்நடத்துவோர் மீது மனிதத்தன்மையற்ற வகையில் மிருகத்தனமான தாக்குதல் தொடுத்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையும் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. இது தமிழக அரசின் காவல்துறை கொள்கை சார்ந்த அம்சமாக தெரிகிறது.

நடவடிக்கை எடுத்திடுக

நடவடிக்கை எடுத்திடுக

மக்களுக்கான பாதிப்புகளை முன்னிறுத்தி நடைபெறும் ஜனநாயக ரீதியான இயக்கங்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களை கைவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. சென்னையிலும், மதுரையிலும் பொய்வழக்கு புனைந்து சிறையில் அடைக்கப்பட் டுள்ள இளைஞர்கள், மாணவர்கள்மீதான வழக்குகளை திரும்பப் பெற்று, நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும்; குண்டாந்தடிகளைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வழிமுறைகளில் கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும்; மனித உரிமைகளை மீறி இளம் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீதும், காவலில் இருந்தவர்கள் மீதுநடத்தப்பட்ட வெறியாட்டத்திற்கு காரணமானகாவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கைது செய்தும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+