திமுக தொண்டர்களைத் தேடட்டும் கலைஞர்... கே.வரதராஜன் விளாசல்
சென்னை: தேடித் தேடித் பார்க்கிறேன், மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது, காரணம் இப்போது அதுதான் முதல் அணி. எனவே அதைத் தேடுவதை விட்டு விட்டு திமுக தொண்டர்களை கருணாநிதி தேடிப் பார்க்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வரதராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தேடித் தேடி பார்க்கிறேன் மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திமுக தலைவர் கலைஞர். அவர் மூன்றாவது அணி என்று தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியை தேடி இருந்தால் கிடைக்காது. ஏனென்றால் அதுதான் தற்போது முதல் அணி.
இந்த அணியை ஸ்பெக்ட்ரம் ஊழல் பட்டியலில் தேடினால் கிடைக்காது; சொத்துக் குவிப்பு வழக்கு பட்டியலில் தேடினால் கிடைக்காது; கிரானைட் ஊழலில், தாதுமணல் ஊழலில் தேடினால் கிடைக்காது; மதுபானக் கூட்டணியில் தேடினால்கிடைக்காது.
எனவே, இந்த அணியை தேடுகிற வேலையை விட்டுவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போன அந்தக் கால உண்மையான திமுக தொண்டர்களை கலைஞர் தேடினால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications