சிறுதாவூர் பங்களாவுக்கு வந்த அந்த கண்டெய்னர் லாரியைப் பிடிக்க வேண்டும்.. ஜி.ரா. கோரிக்கை
சென்னை: சிறுதாவூர் பங்களாவுக்கு வந்த அந்த கண்டெய்னர் லாரியைப் பிடித்து சோதனை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வைகோ கூறி வருகிறார். அவரது சந்தேகம் உண்மைதானோ என்று நினைக்கும் வகையில், அங்கு மர்மமான முறையில் வாகன நடமாட்டமும் உள்ளது.

இந்த நிலையில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கண்டெய்னர் லாரிகள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளது. அதில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வருகிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும், காவல்துறை தலைவர் டி.ஜி.பி.க்கும் வைகோ புகார் கொடுத்துள்ளார். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications