புதுவையில் சி.பி.எம். போட்டியிடுவதாக அறிவிப்பு
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இரு கட்சிகளும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் புதுச்சேரி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி தொகுதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சருமான ரங்கசாமி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications