உற்பத்தி குறைவு... தொடர் விபத்து.. வேலைக்கு ஆள் இல்லை.. பட்டாசு விலை விர்...
கோவில்பட்டி: பட்டாசு ஆலைகளில் பணிபுரிய தேவையான தொழிலாளர் இல்லாமை, தொடர் விபத்து உள்ளிட்ட காரணங்கள் காரணமாக பட்டாசு விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக இரண்டு மடங்கு ஏறியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் இப்போதே வெங்காய வெடி தங்கள் மீது வந்து விழுந்தது போல டென்ஷனாகி காணப்படுகின்றனர்.
மேலும் உற்பத்திக் குறைவு காரணமாகவும் பட்டாசு விலை இந்த முறை உயர்ந்திருக்கிறதாம்.

பட்டாசு இல்லாமல் எப்படி தீபாவளி...
தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர்களுக்கு பட்டாசு இல்லாமல் கொண்டாட முடியாது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன.

சிவகாசியில்
தமிழகத்தில் தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இவை தவிர கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் போன்ற இடங்களிலும் குறைந்த அளவிலும் சிறிய அளவிலும் பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தொடர் விபத்துக்களால் முடக்கம்
சமீபத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர் விபத்து நடந்ததால் அதிக அளவில் வேலைக்கு செல்ல தொழிலாளர் முன் வரவில்லை. இருக்கும் தொழிலாளர்களும் அச்சத்துடனே வேலை பார்த்து வந்தனர்.

வேலைக்குவர மறுக்கும் தொழிலாளர்கள்
கூலி உயர்வும் இல்லாததால் நிறைய அத்தொழிலை விட்டு விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

களை கட்டாத பட்டாசு விற்பனை
கடந்த காலங்களில் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு பண்டிக்கைக்கு சில நாட்களுக்கு முன்புதான் பட்டாசு விற்பனை களைகட்டும்.

புது ஐட்டங்கள் நிறைய...
இந்நிலையில் இந்த தீபாவளிக்கு புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலைதான் ஜாஸ்தி
ஆனால் பட்டாசுகளின் விலைதான் 3 மடங்கு, நான்கு மடங்கு என எகிறியுள்ளதாக கூறுகின்றனர்.

60 ரூபாய்க்கு புஸ்வானம்
ரூ.25க்கு விற்பட்ட தரை சக்கரம் ரூ.30க்கும், ரூ.50க்கு விற்ற புஸ்வானம் ரூ.60க்கும், ரூ.45க்கு விற்கப்பட்ட ராக்கெட் ரூ.60க்கும், ரூ.280க்கு விற்ற வாலா சரவெடி ரூ.350க்கும் உயர்ந்துள்ளது.

5000 வாலா விலை ரூ. 1040
ரூ.1000க்கு விற்ற 5 ஆயிரம் வாலா சரவெடி ரூ.1040 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இது போல் மற்ற ரகங்களில் விற்பனையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications