ஒரே மாதத்தில் 3வது பெருமழை.... மீண்டும் மிதக்குது கடலூர்... திசையெங்கும் பெருவெள்ளம்...
சென்னை: ஒரே மாதத்தில் 3வது பெருமழையை எதிர்கொண்ட கடலூர் வெள்ளத்தால் மூழ்கிப் போய்விட்டது. அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கின்றன.
வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடலூர் அருகே நவம்பர் மாதம் 9-ந் தேதி கரையைக் கடந்தது. இதனால் கடந்த மாதம் 8, 9- ந் தேதிகளில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. நெய்வேலி பகுதியில் 41 சென்டி மீட்டர் மழை பெய்தது.

இதனால் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பரவனாறு, செங்கால் ஓடை வழியாகச் சென்று கல்குணம், பூதப்பாடி கிராமங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. காட்டாறுகளாகச் சென்ற மழைநீர் விசூரில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
பின்னர் நவம்பர் 22, 23-ந் தேதிகளில் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழை கடலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
தற்போது நேற்றும் கனமழை பெய்தது. இப்படி ஒரு மாத காலத்துக்குள் 3 கனமழையை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ளது.

இதனால் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பிலான அனைத்து விவசாயப் பயிர்களும் நாசமாகிப் போய்விட்டன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தற்போது அடுத்த 48 மணிநேரத்துக்கு நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூரின் கதி மிக மோசமாகிவிடும் என்றே கூறப்படுகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications