ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கியது வெட்கக் கேடு - கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஆர்பிஎப் வீரர்களை தாக்கியது அவமானத்துக்குரியது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிபிஆர்எப் படை வீரர்களை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அண்மையில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிபிஆர்எப் வீரர்களை ஓட, ஓட
விரட்டி கற்களை வீசி தாக்கியுள்ளனர். கையாலும் வீரர்களை அடித்தனர். இந்தா வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

CRPF has set a fine example says Kamalhassan

இந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் சேவாக், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், பிரபல நடிகர் கமல்ஹாசனும் டுவிட்டர் மூலமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்

ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை, இளைஞர்கள் தாக்கியது வெட்கக் கேடானது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், இந்தியாவுடன் ஒருங்கிணையுங்கள் என கூறியுள்ளார். பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான இளைஞர்களின் தாக்குதல் வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அஹிம்சையே வீரத்தின் உச்சம் எனக் கூறியிருக்கும் கமல்ஹாசன், தன்னைத் தாக்கிய இளைஞர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தாமல் அந்த வீரர்கள் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhassan posted his twitter page, integrrate into India Shame onthose who dare touch my soldiers. Height of valour is nonviolence. CRPF has set a fine example.
Please Wait while comments are loading...