அம்மிக்கல்லை போட்டு மாமியாரை கொன்ற அம்சவள்ளிக்கு ஆயுள் தண்டனை- கடலூர் கோர்ட் தீர்ப்பு
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியாரை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகளுக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்: கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை பார்த்து தட்டிக்கேட்ட மாமியாரை அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த மருமகளுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த காதலனுக்கும் கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் சிறகிழந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு புவனேஷ், 4, யோகேஷ்,1 இரண்டு மகன்கள் உள்ளனர். லட்சுமணன் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். லட்சுமணன் தம்பி இளவரசனின்,30 நண்பர் காளிரத்தினம்23.

இளவரசனை சந்திக்க காளிரத்தினம் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும்போது, அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அம்சவள்ளியுடன் காளிரத்தினம் தனிமையில் இருந்துள்ளார். இதை லட்சுமணின் தாய் மீனாட்சி,50 பார்த்துவிட்டார். மருமகள் அம்சவள்ளியை தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினத்துடன் சேர்ந்து அம்மி கல்லால் தாக்கி மாமியார் மீனாட்சியை கொலை செய்தார். இதுதொடர்பாக குமராட்சி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திங்கட்கிழமை இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மாமியாரை கொலை செய்த மருமகள் அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
கள்ளக்காதலுக்காக மாமியாரை கொன்ற மருமகள் அம்சவள்ளி இப்போது சிறையில் இருக்கிறார். பாட்டியும் இறந்து விட்ட நிலையில், தந்தையும் வெளிநாட்டில் இருக்க, ஒருபாவமும் அறியாத இரண்டு குழந்தைகள்தான் ஆதரவற்ற நிலையில் உள்ளதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications