ஒரு பவுன் செலவு செய்தால் பல பவுன் களவு போகாது.. கடலூர் போலீஸின் அதிரடி அட்வைஸ்!
சென்னை: கடலூர் காவல்துறை பொதுமக்களுக்கு திருட்டுச் சம்பவங்களிலிருந்து தப்பிக்க ஒரு அறிவுரையை பொதுமக்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதில் கூறியுள்ளவற்றின்படி செயல்பட்டால் நிச்சயம் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கலாம் என்பது கடலூர் காவல்துறையின் எண்ணம்.
கடலூர் புதுநகர் காவல் நிலையம் சார்பில் இந்த அறிவுரை மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில் உள்ளதாவது...

வீ்ட்டுக்கு வீடு கேமரா வைப்போம்
புதுநகர் காவல்துறையின் வேண்டுகோள். வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம். குற்றம் நடப்பதைத் தடுப்போம்.

பொதுமக்களே சிந்திப்பீர்
பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டும் நாம், ஆசை ஆசையாக பவுன் நகைகளை வாங்கி வைக்கிறோம்.

களவாணிகள்
எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் களவாணிகள் ஏதாவது வழியில், குற்றம் செய்து, உங்களது சொத்தைக் களவாடிச் செல்கின்றனர். காவல்துறை கண்டுபிடிக்க எந்தத் தடயமும் இல்லாமல் போனால் எப்படி கண்டுபிடிப்பது?

களவு போகாமல் தடுப்போம்
எனவே வீ்ட்டுக்கு வீடு கேமரா வைப்போம். களவு போகாமல் தடுப்போம்.

ஒரு பவுன் செலவு செய்தால்
சிந்தியுங்கள். ஒரு பவுன் செலவு செய்தால், பல பவுன் களவு போகாது.

களவு குறித்து தெரிவிக்க
குற்றம், களவு, சட்டவிரோத செயல்கள் பற்றிய தகவல் தெரிவிக்க காவல் ஆய்வாளர் , புதுநகர் காவல் வட்டம் கடலூர். செல் 944329209. புதுநகர் காவல் நிலையம் - 04142 - 284350.
இந்த துண்டுப் பிரசுர அறிவுரையை புதுநகர் காவல் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் காவல்துறையினர் வினியோகிக்கவுள்ளனராம். நல்ல யோசனையாக இருக்கிறதே...!
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications