கடலூரில் மீண்டும் உருகிய வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை “சீல்”

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அவை, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் 3 அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

விருத்தாசலம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயிலின் காரணமாக சிறிதளவு உருகியது.

கலெக்டர் பார்வை:

கலெக்டர் பார்வை:

உருகிய சீலை கலெக்டர் கிர்லோஷ்குமார் சென்று பார்வையிட்டார். சிறிய அளவு உருகி இருந்ததால் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் உருகிய சீல்:

மீண்டும் உருகிய சீல்:

இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிக அளவு அந்த "சீல்" உருகியது. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் கிர்லோஷ்குமார் மற்றும் வேட்பாளர்கள், முகவர்களுடன் சென்று அதை பார்வையிட்டார்.

பூட்டின் மறுபக்கம்:

பூட்டின் மறுபக்கம்:

உருகிய சீலுக்கு பதிலாக புதிய "சீல்" வைக்கலாமா என்று ஆலோசனை செய்தனர். அப்போது இளகிய சீலுக்கு பதிலாக பூட்டின் வேறு பக்கத்தில் மறுசீல் வைக்கலாம் என்று முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

மாற்று சீல்:

மாற்று சீல்:

அதன்படி உருகிய சீலுக்கு அருகில் பூட்டின் வேறு பக்கத்தில் மறு "சீல்" வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+