தூத்துக்குடியிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1.81 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு கடத்த முயன்ற செம்மர கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் தரை விரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறி சான்று பெற்று கடந்த 2ஆம் தேதி துறைமுகத்துக்கு சென்ற கண்டெய்னரை சீலை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அதற்குள் செம்மர கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த கண்டெய்னரை கைப்பற்றிய சுங்க துறையினர் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அதே நிறுவனத்தின் பெயரில் துபாய்க்கு அனுப்பி வைப்பதற்காக கன்டெய்னர்கள் தூத்துக்குடி துறைமுகததுக்கு வந்தது. இதை துபாய்க்கு அனுப்பி வைத்த சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்ததால் அந்த கன்டெய்னரை தூத்துக்குடி துறைமுகத்துக்கே திருப்பி அனுப்பி வைக்குமாறு துபாய் ஜபல் அலி துறைமுக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த கன்டெய்னரை துபாய் அதிகாரிகள் தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பினர். அதனை சோதனை செய்ததில் உள்ளே செம்மரக்கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உனடியாக அந்த கண்டெய்னர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சுங்க துறை அதிகாரிகள் கூறும்போது, கடந்த 2ஆம் தேதி சம்மரகட்டைகள் கடத்திய வழங்கில் லாரி டிரைவர் கைது செயயப்பட்டார். இதில் ஈடுபடும் கும்பல் போலியாக கம்பெனிகள் பெயரில் செம்மரகட்டைகளை அனுப்பி வைக்கி்ன்றன.
இதில் ஈடுபடும் தலைமறைவாக இருக்கும் கும்பலை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். கூடிய விரைவில் அவர்களை பிடிதது விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications