அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம்- புயலாக மாறும் வாய்ப்பு!
சென்னை: அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கே சுமார் 570 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்திருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 72 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அது புயலாக மாறினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம். ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications