தமிழகத்தை நோக்கி திரும்புகிறது "மாதி' புயல்: மழை எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள "மாதி' புயல், வலுவிழந்து தமிழகத்தை நோக்கி திரும்பும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இப்போது அதி தீவிர "மாதி' புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் இப்போது சென்னையில் இருந்து வடகிழக்கே 510 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் மெதுவாக வலுவிழந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இது வலுவிழந்த நிலையில் தமிழகம் நோக்கி தென்மேற்கு திசையில் திரும்பும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வு நிலையாகவோ தமிழக கடற்கரையை ஓரிரு நாள்களில் கடக்கும். அப்போது சில நாள்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ செவ்வாய்க்கிழமை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சிவகிரி பகுதியில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் 20 மி.மீ. மழையும், மேட்டுப்பட்டியில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் புயல் நிலை கொண்டிருப்பதால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications