ஓகி புயல் பாதிப்புகள்... முதல்வரிடம் போனில் கேட்ட மோடி- உதவ தயார் என உறுதி
ஓகி புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
ஓகி புயல் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் பாதிக்கப்பட்டது குமரி மாவட்டம்தான். ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

குமரி மாவட்டமே தனித்தீவாக மாறியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
மீனவர்கள் பாதிப்பு, சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேத விவரங்களை மனுவாக தருமாறும் நிவாரணம் அளிப்பதாகவும் முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்தார்.
கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications