ஓகி புயல்: கன்னியாகுமரியில் டிச.7வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஓகி புயல் பாதிப்பில் இருந்து விடுபடாத கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி: ஓகி புயல் தாக்கத்தினால் கன்னியாகுமரி தண்ணீரில் மிதக்கிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் டிசம்பர் 5,6ஆம் தேதி 2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. 3000 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்ததால் கடந்த 4 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம்
ரப்பர் மரங்கள், வாழை, தென்னை மரங்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. ஆறுகள், அணைகள் நிறைந்த இந்த மாவட்டத்தை ஓகி புயல் சூறையாடிச் சென்றுள்ளது. ஆங்காங்கே முறிந்த மரங்களும், அறுந்து விழுந்த மின்கம்பிகளுமாக காட்சியளிக்கின்றன.

மீட்பு பணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடற்படை உதவியுடன் பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்
நீரோடி, முட்டம் ஆகிய கடற்கரை கிராமங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் டிசம்பர் 5,6ஆம் தேதி 2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications