75 ஆண்டுக்குப் பின் தாக்கிய அதிதீவிர புயல்- இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் மழை தொடரும்!
சென்னை: அதிதீவிர வர்தா புயல் சென்னையைத் தாக்கி கரையைக் கடந்த நிலையிலும் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்க கடலில் உருவான அதிதீவிர வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை இருந்தது.

வலுவாக கரையை கடந்தது
வர்தா புயலின் மையப்பகுதி பகல் 2.45 மணி முதல் மாலை 5 மணி வரை கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது வலுவாகவே கடந்துள்ளது.

இன்றும் மழை
புயல் கரையை கடந்த பின் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும்.

கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
75 ஆண்டுக்கு பின்...
1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை அதிதீவிர புயல் தாக்கி உள்ளது. அதற்கு பின்னர் 75 வருடங்களுக்கு பிறகு இப்போது புயல் தாக்கி உள்ளது.
இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications