தினமும் உறவுக்கு அழைத்த கள்ளக்காதலி.. கட்டையால் அடித்து கொன்ற கூலித் தொழிலாளி
கடலூர்: தினமும் உடலுறவுக்கு வலியுறுத்தி தொல்லை செய்ததால் 2 குழந்தைகளின் தாயான தனது கள்ளக் காதலியை அடித்தே கொன்றதாக கூலித் தொழிலாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சாத்துக்கூடல் கீழ்பாதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில், 2 குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்த இவரது மனைவி மங்கையர்க்கரசி (35)க்கும், தேவங்குடி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தசாமிக்கும் கள்ளக்காதல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் சில தினங்கள் முன்பு தேவங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவிலுள்ள, கம்மாபுரம் சாலையோரம் உள்ள சிமெண்டு கட்டை மீது மங்கையர்கரசி ரத்த காயத்தோடு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் கள்ளக்காதலன், கோவிந்தசாமியை தேடி வந்தனர்.

கள்ளக்காதலன் கைது
நேற்று முன்தினம் இரவு வெளியூர் செல்வதற்காக கோவிந்தசாமி, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் காத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கோவிந்தசாமியை கைது செய்தனர்.

திருமணமானவர்
போலீசாரிடம் கோவிந்தசாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு ரேவதி என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளான். திருமணத்திற்கு பின்னர் எனது மனைவியின் சொந்த ஊரான சொட்டவலத்தில் தனி வீட்டில் வசித்து வந்தேன்.

செல்போன் வழி காதல்
இதற்கிடையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தலைகுளத்தில் குறி கேட்பதற்காக நான் சென்றேன். அங்கு மங்கையர்கரசியும் வந்திருந்தார். அப்போதுதான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டோம். அதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி வந்தோம்.

தாய் வீட்டில் தனிமை
இதனை தொடர்ந்து இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும், தேவங்குடியில் உள்ள எனது தாய் வீட்டில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். நாட்கள் செல்ல, செல்ல மங்கையர்கரசி செக்ஸ் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்.

மனைவியிடம் மாட்டினார்
தினமும் தேவங்குடியில் உள்ள எனது தாய் வீட்டுக்கு மங்கையர்கரசி வந்து, உல்லாசம் அனுபவிக்க வற்புறுத்தி வந்தார். எங்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் எனது மனைவி கண்டித்தார். எனவே நான், மங்கையர்கரசியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிட முடிவு செய்தேன்.

வெளிநாடு ஓடினேன்
அதன்படி வேலை செய்வதற்காக வெளிநாடு சென்றேன். ஆனால் எப்படியோ எனது செல்போனை தெரிந்து கொண்டு மங்கையர்கரசி மீண்டும் கள்ளத்தொடர்பை தொடர வேண்டினார். ஒரு நாள், உடனே ஊருக்கும் வரும்படியும், வராவிட்டால் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். எனவே வெளிநாடு சென்ற 2 மாதத்தில் ஊருக்கு வந்துவிட்டேன். பின்னர் மங்கையர்கரசி தினமும் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.

செக்ஸ் டார்ச்சர்
கடந்த 22ம் தேதி நான் எனது மனைவி, குழந்தையுடன் விருத்தாசலத்தில் நடந்த மாசிமக விழாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததேன். அப்போது திடீரென மங்கையர்கரசி எனது செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே தேவங்குடியில் உள்ள வீட்டுக்கு வந்து உல்லாசம் அனுபவிக்குமாறு அழைத்தார். நான் வரமுடியாது என்றபோது, மங்கையர்கரசி, தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.

கோபத்தில் கொலை
வேறுவழியின்றி நான் தேவங்குடிக்கு சென்றேன். அங்கு பஸ் நிறுத்தத்தில் மங்கையர்கரசி நின்று கொண்டிருந்தார். செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் குடும்ப நிம்மதி பறிபோனதால் கோபத்தில் இருந்த நான், அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மங்கையர்கரசியை அடித்தேன். இதில் அவர் இறந்தார். இவ்வாறு கோவிந்தசாமி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications