உடுமலை தலித் இளைஞர் படுகொலை வழக்கு: கவுசல்யாவின் உறவினர் நீதிமன்றத்தில் சரண்
திண்டுக்கல்: காதல் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், 22. தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், உயர் வகுப்பைச் சேர்ந்த 19 வயது கவுசல்யாவை 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் - கவுசல்யா தம்பதியை கடந்த 12 ஆம் தேதி ஒரு கும்பல் உடுமலைப்பேட்டையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை நடந்த மறுநாள் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும், இக்கொலையில் தொடர்புடைய ஜெகதீஷ், மணிகண்டன், செல்வா, காமராஜன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பதுங்கியிருந்ததை அறிந்து அவர்களை 15ஆம் தேதி அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சங்கரின் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் உறவினரான பிரசன்னா என்பவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை மார்ச் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications