உடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தாய்மாமன் கைது
திருப்பூர்: உடுமலைப்பேட்டை ஆணவப்படுகொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டிதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரை உடுமலையில் கடந்த 13ம் தேதி கும்பல் ஒன்று வெட்டிச் சாய்த்தது. இதில், தலித் இளைஞர் சங்கர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலை வழக்கில் கவுசல்யாவின் உறவினர்கள் மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த 9 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ், உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டிதுரையையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் உடுமலை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசில் வாக்குமூலம் கொடுத்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, எனது மகளின் செயலால் உறவினர்கள் என்னை கேவலமாக பேசினர். என்னால், கோயில் விழா, சந்தை, கடை என எங்கும் செல்ல முடியவில்லை. ஊர் முழுவதும் பல மாதிரியாக பேச துவங்கினர். நாளுக்கு நாள் எனது ஆத்திரம் அதிகரித்தது. எனவே, சங்கரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். சங்கர் கதையை முடித்துவிட்டு, கவுசல்யாவை காரில் அழைத்து வாருங்கள் என எனது ஆட்களுக்கு உத்தரவிட்டேன். கவுசல்யா வர மறுத்தால் அவளையும் தீர்த்து கட்டிவிடுங்கள் என கூறினேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காட்ட கவுசல்யா கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் கவுசல்யா குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரசன்னா உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஸ்ரீவித்யா, பிரசன்னாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்துள்ளார். இந்த விசாரணையில் , சங்கர் கொலை தொடர்பாக மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications