தசரா பண்டிகை எதிரொலி- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: தசரா பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஆனபோதும், மழை காரணமாக சில வகைப் பூக்கள் மட்டும் விலை குறைந்து விற்கப்படுகிறது.
தமிழகத்தில் சரஸ்வதி பூஜை நேற்றும், ஆயுத பூஜை, விஜயதசமி இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
நெல்லையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.700க்கு விற்கப்பட்ட பிச்சிப் பூ தற்போது ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.800க்கு விற்கப்பட்டது. ஆனால், மல்லிகை விலை ரூ.600லிருந்து ரூ.500 ஆக குறைந்து காணப்பட்டது.
மழை காரணமாக...
உள்ளூர் கேந்தி பூ மழையால் நனைந்ததால் ரூ.40 முதல் ரூ.50க்கு விற்கப்பட்டது. கோழிக்கொண்டை பூ கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டது. சாதாரண நாட்களில் ரூ.50க்கு விற்கப்படும் சம்பங்கி பூ காலை ரூ.200க்கு விற்கப்பட்டது.
தசரா பண்டிகையையொட்டி....
இதுகுறித்து மொத்த பூ வியாபாரிகள் சிலர் கூறுகையில், தசரா பண்டிகையாலும், மழையால் உள்ளூர் பூ உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும் சில வகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிழமை (இன்று) தசரா என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
சில்லறை விற்பனை...
தசரா பண்டிகை என்பதால் கோயிலுக்கு மாலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இன்னும் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளது. சில்லரை விற்பனை கடைகளிலும் வழக்கத்தை விட பூக்களின் விலை கடுமையாக உயர்நதுள்ளது எனத் தெரிவித்தனர்.
வாழை இலை...
சதாரண பூக்களால் கட்டப்பட்ட சிறிய ஆரம் ரூ.50க்கும், ரோஜா சேர்த்து கட்டிய ஆரம் ரூ.75க்கும் விற்கப்பட்டது. இது போல் இலை, வாழை இலை போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications