செல்போனை உடைத்த மாமியார்: அம்மி கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது
சென்னை: சென்னையில் செல்போனை உடைத்த காரணத்திற்காக தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் கீர்த்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.
சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.
குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் செல்வி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் செல்வி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இன்று காலை 7 மணி அளவில் குளோரி அவரது வீட்டின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குளோரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடும்பத் தகராறில் மருமகள் அம்மிக்கல்லை தூக்கி போட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications