ஓபிஎஸ் நியமித்த உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிரான்ஸ்பர்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 11 நாட்களுக்கு முன்பு நியமனம் செய்த உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் நலவாழ்வுத்துறை ஐ.ஜியாக தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டார். 11 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தால் உளவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட்சன் தேவசீர்வாதம்
உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த கண்ணப்பன் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 2015ஆம்மு ஜூலை 31ஆம் தேதியன்று புதிய உளவுத்துறை ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

திருச்சி சத்தியமூர்த்தி
அதே ஆண்டு டிசம்பர் மாதம் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் நியமனம்
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். சசிகலா உடன் மோதல் வெடித்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் நாளுக்கு முதல்நாள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று சத்தியமூர்த்திக்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார்.

உளவுத்துறை ஐஜி மாற்றம்
இப்போது சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் உளவுத்துறை ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சென்னை காவலர் நலவாழ்வுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தினால் நியமனம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி 11 நாட்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறை ஐஜி யார்?
விடுப்பில் சென்ற உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மீண்டும் அந்த பொறுப்பை ஏற்கும் மனநிலையில் இல்லை. எனவே காலியாக உள்ள அந்தப் பதவியில் தற்போது சென்னை நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் காவல் ஆணையராக உள்ள தாமரைக் கண்ணனை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications