அப்பாவிடம் நாங்கள் பேசுகிறோம்: அழகிரியை சமாதானம் செய்த தயாளு அம்மா, கனிமொழி
சென்னை: சென்னை சென்றபோது அழகிரியை அவரது தாய் தயாளு அம்மாளும், தங்கை கனிமொழியும் சமாதானப்படுத்தி உள்ளார்கள். திமுக தலைவர் கருணாநிதியிடம் அழகிரி பற்றி பேசுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் இருந்து தனது மூத்த மகன் மு.க. அழகிரியை நிரந்தரமாக நீக்கி அக்கட்சி தலைவர் கருணாநிதி அதிரடி நடவடிக்கை
எடுத்தார். இதையடுத்து அழகிரி சென்னை சென்றார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது தந்தை பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்ற பிறகு கோபாலபுரம் சென்று தாய் தயாளு அம்மாளை சந்தித்து பேசினார்.
மறுநாள் சென்னை சி.ஐ.டி. காலனிக்கு சென்று தங்கை கனிமொழியை சந்தித்தார்.

தயாளு அம்மாள்
அப்பாவிடம் பேசி உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைக்கிறேன். நீ ஒன்றும் கவலைப்படாதே என்று தயாளு அம்மாள் தன்னை சந்திக்க வந்த மகன் அழகிரியிடம் தெரிவித்து அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

அழகிரி
அம்மா சமாதானம் செய்தததால் தான் அழகிரி தயாளு அம்மாளை சந்தித்த இரவே மதுரைக்கு கிளம்பும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு போயஸ் கார்டனில் உள்ள மகன் துரை தயாநிதி வீட்டில் தங்கியுள்ளார்.

கனிமொழி
சிஐடி காலனி வீட்டுக்கு வந்த அழகிரியை கனிமொழியும், அவரது தாய் ராஜாத்தி அம்மாளும் சமாதானம் செய்துள்ளனர். அப்போது கனிமொழி தனது அண்ணனிடம், தலைவர் எடுக்கும் முடிவுக்கு எதிராக எதுவும் கூறாதீர்கள், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள். நான் அப்பாவிடம் பேசுகிறேன். அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

பேசலாம்
திமுகவுக்கு எதிரான சக்திகள் உங்கள் வீடு தேடி வந்தாலும் கைவிட்டுவிடுவார்கள். எதுவாக இருந்தாலும் நாம் பேசித் தீர்த்துக்கொள்வோம். திமுகவுக்கு எதிரானவர்களுடன் சேர்ந்தால் உங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்று கனிமொழி அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.

வாக்குகள்
உங்களுடைய எதிர்ப்பால் திமுகவின் பாரம்பரிய வாக்குகளுக்கு பாதிப்பில்லை. ஆனால் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் நமக்கு கிடைக்காமல் பாஜகவுக்கு சென்றுவிடும். உங்களுக்கு திமுக தான் நிரந்தர பாதுகாப்பு ஆகும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவில் தான் நான் எம்.பி. ஆனேன்.
அப்படி இருக்கையில் அவரை தோற்கடிப்பேன் என்று நீங்கள் பேசியது வருத்தமளிக்கிறு. நமக்கு உதவியர்களுக்கு நாம் உதவ வேண்டும். தலைவருக்கும், கட்சிக்கும் தான் வாக்குகள். நாம் அவரின் நிழலில் தான் நிற்கிறோம். அதனால் அவர் மனம் புண்படும்படி நடக்காதீர்கள் என்று அழகிரியிடம் தெரிவித்துள்ளார் கனிமொழி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications