டி.டி. மருத்துவ மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி.டி. மருத்துவ கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது. முதல் பேட்ச் மாணவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் முடிந்துதமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவகல்லூரிகளில் இவர்கள் அனுமதிக்கபட்டுள்ளனர்.

திருவள்ளூர் அருகே உள்ள குன்னவலம் டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2011-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 103 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு முதலாமாண்டு தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகளும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டது.

இந்நிலையில் டி.டி. மருத்துவக் கல்லூரி இயங்க இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்தது. இதனால் மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம், சாலைமறியல் என பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது அவர்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. முதலில் சேர்ந்த 150 மாணவ-மாணவிகளை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அந்த 150 மாணவர்களுக்கும் இன்று காலை 11 மணிக்கு கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் மற்றும் சாதி அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்க இடம் ஒதுக்கப்பட்டது. மாணவர்கள் புதிதாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இப்போது எந்த வருடத்தில் இருக்கிறார்களோ அப்படியே அரசு கல்லூரியில் படிக்கலாம்.

முதல் பேட்ச் மாணவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் முடிந்து தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவகல்லூரிகளில் இவர்கள் அனுமதிக்கபட்டுள்ளனர். நாளையே உடனடியாக சேர சொல்லி அறிவுறுத்தபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+