தஷ்வந்தை விட மோசமான மிருகங்கள் இந்த 17 பேருக்கும் எந்த தண்டனை தகும்?
தஷ்வந்தை போன்று இந்த 17 மிருகங்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
Recommended Video

சென்னை: ஹாசினி வழக்கு குற்றவாளி தஷ்வந்தை போன்று சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை கட்டுப்படுத்த தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரும் எதிர்பார்ப்பதாகும்.
இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை நாளுக்கு நாள் கொடூரமாகிக் கொண்டே போகிறது.

உச்சநீதிமன்றம்
டெல்லி மாணவி நிர்பயா என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமான வகையில் தாக்கப்பட்டார். இதையடுத்து 6 பேரில் ராம் சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவர் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த டெல்லி விரைவு நீதிமன்றம் ஏனைய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அப்போது 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

6 வயது சிறுமி
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் யஷ்வந்த் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து உண்மையை சிறுமி யாரிடமும் கூறிவிடாமல் இருக்க அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தீவைத்து கொளுத்தினார்.

தூக்கு தண்டனையை உறுதி செய்தது
இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தனது தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்தது. தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மாற்றுத்திறனாளி
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுமியை அந்த அபார்ட்மென்ட்டில் பணியாற்றும் 17 பேர் கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 17 பேரும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பேத்தி வயதில் இருக்கும் சிறுமியை பலாத்காரம் செய்ய ரவி என்ற மிருகத்துக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

தண்டனை கொடுக்க வேண்டும்
பலாத்காரம் செய்த 17 பேருக்கு தஷ்வந்துக்கு கொடுத்தது போல் மரண தண்டனை கொடுத்தால் மட்டுமே பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். நீங்காத நினைவுகளை தரும் குழந்தை பருவத்தில் இதுபோன்ற ஆறாத வடுக்களை தந்த இந்த கயவர்கள் தூக்கில் ஏற்றப்படுவதுதான் சரியான நீதியாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications