நெல்லை அருகே சிறுவனை கொன்றவருக்கு தூக்கு.. மாவட்ட நீதிமன்றம் அதிரடி
நெல்லை அருகே சிறுவனை கொன்றவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
நெல்லை: சிறுவனை கொன்றவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
நெல்லை மாவட்டம் பேட்டை சுந்தரவிநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (38),பிரேமா (32) தம்பதியினர். இவர்களுக்கு கல்பனா (12) என்ற மகளும் தருண் மாதவ் (5) என்ற மகனும் உள்ளனர்.
இசக்கியப்பன் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் பேட்டையில் வசித்து வருகின்றனர். இசக்கியப்பன் உறவினரான ஆறுமுகம் என்பவரும் அவர்கள் வீட்டருகே வசித்து வருகிறார்.

நடத்தையில் சந்தேகம்
ஆறுமுகத்துக்கும் பிரேமாவின் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் நடந்து குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆறுமுகம் அடிக்கடி அவருடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

கோபித்து சென்ற மனைவி
குழந்தையையும் தன்னுடைய குழந்தை இல்லை எனக்கூறி ரோட்டில் வீசி விட்டார். எனவே ஆறுமுகத்தின் மனைவி கோபித்து கொண்டு மும்பை சென்று விட்டார்.

சிறுவன் கொலை
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி தனது குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்த பிரேமாவை தெருவில் வழிமறித்து அவரையும் குழந்தை தருண் மாதவ்வையும் ஆறுமுகம் வெட்டியுள்ளார். இதில் 5 வயது சிறுவனான தருண் உயிரிழந்தார்.

விசாரணை
பிரேமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நெல்லை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

தூக்கு தண்டனை
இதில் இன்று குற்றவாளி என நிருபிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு துாக்கு தண்டணை விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கினார். மேலும், கொலையாளி ஆறுமுகத்திற்கு 5 லட்சத்து 10 ஆயிரம் அபராத தொகையையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications