சசிகலா ஒரு புறம்போக்கு... ஜெ. வீட்டு வாசலில் நின்றபடி தீபா ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புறம்போக்கு சசிகலாவின் பேச்சை கேட்டு தீபக் எங்களை வரவழைத்து அடித்தான் என்று தீபா ஆவேசமாக பேசினார்.

ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். எனினும் சசிகலாவின் சொந்தக்காரர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

போயஸ் தோட்டத்தில் தீபா

போயஸ் தோட்டத்தில் தீபா

ஜெயலலிதாவின் வீடு தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு அவரின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்துக்கு வந்தார். மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டர்கள் தாக்கினர்

குண்டர்கள் தாக்கினர்

பின்னர் உள்ளே சென்ற தீபாவை தினகரனின் குண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தீபா தாக்கப்பட்டதை அடுத்து கணவர் மாதவனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.

நிருபர்கள் மீது தாக்குதல்

நிருபர்கள் மீது தாக்குதல்

போயஸ் கார்டன் பகுதியில் தீபா, மாதவனின் ஆதரவாளர்கள் குவிந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் வெளியே வந்த தீபா கூறுகையில், ரிபப்ளிக் டிவி செய்தியாளரை சசிகலா, தினகரனின் அடியாட்கள் கடுமையாக தாக்கினர். புறம்போக்கு சசிகலாவுடன் சேர்ந்து என்னை திட்டமிட்டு வரவழைத்தது தீபக் தான்.

ஏதோ நடக்கிறது

தற்போது என்னை தாக்கினான். போயஸ் தோட்டத்துக்குள் ஏதோ நடக்கிறது. அதனால் தான் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எங்களை அம்மா போல் வளர்த்த அத்தையை சசிகலாவுடன் தீபக்கும் சேர்ந்து அடித்து கொன்றுவிட்டான். கண்டிப்பாக இதற்காக நியாயம் கேட்பேன். எனக்கும், எனது கணவர் மாதவனின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayalalithaa's niece Deepa addressed Sasikala as Poramboku.
Please Wait while comments are loading...