தீபாவின் கணவர்,கார் டிரைவரெல்லாம் அரசியலுக்கு வரும்போது.. ரஜினி வந்தால் என்ன? ராதாரவி பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவின் கணவர், கார் டிரைவரெல்லாம் அரசியலுக்கு வரும் போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் என்ன என நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார். ஏகப்பட்ட ரசிகர்ளை வைத்துள்ள ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் ராதாரவி சென்னையில் இன்று செய்தியாளர்களிளடம் பேசினார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தங்களின் கருத்து என்ன என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Deepa and her husband, her car driver and all has come to politics: Radharavi

அதற்கு பதிலளித்த ராதாரவி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்துள்ளார். தீபாவின் கணவர், தீபாவின் கார் டிரைவரெல்லாம் அரசியலுக்கு வந்துள்ளனர்.

யார் யாரெல்லாமோ அரசியலுக்கு வருகின்றனர். ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ள ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன? அவர் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை என ராதாரவி கூறினார்.

அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார் ராதாரவி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அண்மையில் அவர் திமுகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Radharavi says that Deepa and her husband, her car driver and all has come to politics. Rajinikanth has so many fans, he can come for the politics he said.
Please Wait while comments are loading...