பணத்துக்காக சசிகலாவோடு சேர்ந்து அத்தையைக் கொன்று விட்டான் தீபக்.. தீபா பயங்கர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று போயஸ் இல்லத்திற்குள் சென்ற நிலையில் அவரோடு சென்ற ஆங்கில டிவி சேனல் காமிரான மேன் மற்றும் நிருபர் மோசமாக தாக்கப்பட்டார்.

சுமார் அரை மணிநேரத்திற்கு பிறகு தீபா வெளியே வந்தார். அப்போது கண்ணீரோடு அவர் கூறுகையில், சசிகலா கும்பலோடு சேர்ந்து கொண்டு தீபக் சதி செய்து தன்னை அழைத்ததாகவும், ஜெயலலிதா போட்டோவுக்கு பூ போட்டுவிட்டு செல்லுமாறு அவர் அழைத்ததை நம்பி தான் போயஸ் இல்லம் வந்ததாகவும், ஆனால் உள்ளே சபாரி ஆடை அணிந்த குண்டர்கள் டிவி சேனல் நிருபரையும், கேமரா மேனையும் தாக்கியதாகவும் தீபா தெரிவித்தார்.

Deepa is accusing his brother Deepak for Jayalalithaa death

மேலும், தன்னை தாக்கத்தான் தீபக் வரவழைத்திருப்பார் என்றும், பத்திரிகையாளர் தாக்கப்பட்ட பிறகு தான் அலர்ட்டாகியதால் தப்பித்ததகாவும் அவர் தெதிிரிவ்தாத்ர.

மேலும் தீபக் அம்மா போல இருந்த அத்தையான ஜெயலலிதாவை சசிகலா கும்பலோடு சேர்ந்து கொன்றுவிட்டதாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார் தீபா. மேலும் சசிகலாவை புறம்போக்கு என கூறி ஒருமையில் திட்டினார் தீபா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa is accusing his brother Deepak for Jayalalithaa death, After visit poes garden.
Please Wait while comments are loading...