அத்தை ஜெயலலிதாவின் ஆஸ்தான ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீபா வழிபாடு!
தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
ஸ்ரீரங்கம்: தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா, திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் இன்று காலை தன் கணவர் மாதவனுடன் வழிபாடு நடத்தினார்.
ஜெயலலிதா சாயலில் உள்ள தீபா அதிமுகவை கட்டி காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பப்பட்டனர். அதன்படி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தொடங்கினார்.
ஆனால் அரசியலில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபடாததால் அவர் மீது பேரவையை நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால் பேரவைகள் கூண்டோடு கலைக்கப்பட்டன.

அவ்வப்போது ஈடுபாடு
இந்நிலையில் அதிமுக உள்கட்சி விவகாரம், சசிகலா தினகரன் விவகாரம் என அவ்வப்போது தனது இருப்பை பதிவு செய்து வந்தார். எனினும் போயஸ் கார்டனில் கணவர் மாதவனை கண்டபடி பொது இடத்தில் பேசியது மக்களை முகம் சுளிக்க வைத்தது.

பேஸ்புக், அறிக்கை
பொதுவாக பேஸ்புக், அறிக்கை மூலம் அரசியல் நடத்தி வந்தார் தீபா. பேரவையை விஸ்தரிக்க தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முடிவையும் ஏனோ காரணத்தினால் கைவிட்டார்.

மேடியுடன் இணைந்த தீபா
இதனிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரித்திருந்து மாதவன்- தீபா தம்பதி ஒன்றிணைந்தனர். தீபா அழைத்தால் மட்டுமே வீட்டுக்கு செல்வேன் என்றிருந்த மாதவன் கடந்த 2 நாள்களுக்கு முன் தினம் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து தம்பதி சமேதராக இருவரும் ஜெயலலிதாவின் சமாதியில் ஆசி பெற்றனர்.

முதல்முறையாக வெளியே வந்தார்
இந்நிலையில் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க நேற்று கணவர் மாதவனுடன் குழுமூர் சென்றார். அங்கு அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் தீபா...
இதைத் தொடர்ந்து திருச்சியில் முகாமிட்ட தீபா, இன்று காலை ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை வழிபாடு செய்தார். அங்கு அவருக்கு பட்டாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்கும் இடம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்தான். அந்த இடத்துக்கே தற்போது அவரது மருமகள் தீபாவும் சென்றுள்ளார். அத்தையை மாதிரி அரசியலில் உலா வருவாரா என்பது போக போகத்தான் தெரியும்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications