அரை மணிநேரமாக மரண பீதி.. தீபாவின் திக், திக் போயஸ் கார்டன் நிமிடங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் இல்லத்திற்குள் சென்று அரை மணிநேரம் மேலாகியும் அவர் என்னவானார் என்ற தகவல் கிடைக்காததால் அவரின் ஆதரவாளர்கள் பீதியடைந்தனர்.

சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் இல்லம் சென்றதாக தீபா தெரிவித்தார். அவர் போயஸ் இல்லம் சென்ற பிறகு பத்திரிகையாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். குடியிருப்புவாசிகள் கூட போயஸ் இல்லம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது..

Deepa not traceable since more than half an hour she after enter poes garden

பத்திரிகையாளர்களை போயஸ் இல்லத்தில் உள்ள குண்டர்கள் மோசமாக தாக்கி அனுப்பி வைத்துள்ளனர். எனவே தீபாவுக்கு என்னவானதோ என்று தெரியாத நிலை இருந்தது. வெளியேயுள்ள அவரது ஆதரவாளர்களோ, முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலம் இது. பாதுகாப்பு இல்லாத வீடு போயஸ் இல்லம். அப்படியிருக்கும்போது, தீபா இப்போது என்னவானாரோ தெரியவில்லையே என பதைபதைப்போடு டிவிகளில் பேட்டியளித்தனர்.

இருப்பினும் அரை மணி நேரம் கழித்து தீபா வெளியே வந்து பேட்டியளித்தார். அப்போது டிவி சேனல் நிருபர் தாக்கப்பட்டதும், தனது கணவர் மாதவனுக்கு போன் போட்டு வர வைத்ததாக பதற்றத்தோடு தெரிவித்தார். மாதவன் வந்ததால் உயிர் தப்பியதாக அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa not traceable since more than half an hour after enter poes garden which is create panic among her supporters.
Please Wait while comments are loading...