ஜெ. சிகிச்சை விவகாரம் பற்றி மொத்தமாக உண்மையை கூறலாமே.. தீபா கேள்வி
ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் குறித்து சிறிது சிறிதாக உண்மை கூறுவதற்குப் பதில் மொத்தமாக கூறிவிடலாமே என்று தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் குறித்து மொத்தமாக உண்மையை கூறிவிடலாமே என்று தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சையின்போது சசிகலா கூறியதைதான் தாங்கள் கூறினோம் என்றும் அவர் இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சசிகலா கூறியதையே தாங்கள் கூறினோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தீபா பேட்டி
சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போயஸ் கார்டனில் தீபா பேசுகையில், ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் குறித்து அமைச்சர்களை பொய் சொல்ல சொன்னது யார்?

இத்தனை நாள்
சிறிது சிறிதாக உண்மையை சொல்வதற்குப் பதில் மொத்தமாக எல்லாவற்றையும் கூறிவிடலாமே. ஜெயலலிதா சிகிச்சை படத்தை வெளியிடுவோம் என்று கூறியவர்கள் இத்தனை நாள் என்ன செய்தார்கள்.?

நிரூபணம்
ஜெயலலிதா மரணம் குறித்து ஆழமான சந்தேகத்தை தற்போது நிரூபணமாக்கிவிட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் வழக்கு தொடர்வது உறுதி.
சந்தேகம் வலுப்பு
சசிகலா சொன்னதைதான் நாங்கள் கூறினோம் என்றும் ஜெயலலிதாவை நாங்கள் நேரில் பார்க்க வில்லை என்றும் அமைச்சர் கூறியதை தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. அ.தி.மு.க. தொண்டர்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஜெயலலிதா மரணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ இருந்திருந்தால் டி.டி.வி. தினகரன் முன்கூட்டியே வெளியிட்டு இருக்கலாம். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் துணிந்து வெளியிடட்டும்.

பிரதமரிடம் கோரியுள்ளேன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரதமரிடம் கோரி உள்ளேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் காலம் கடந்து பல கருத்துகளை சொல்லி வருகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னதாக கூறி இருக்கிறார்.

இரட்டை இலை எனக்கே
அ.தி.மு.க.வின்கோ ஒன்றரை கோடி தொண்டர்களும் என் பக்கம் உள்ளார்கள். இரட்டை இலை சின்னம் எனக்கே கிடைக்கும். அச்சமயம் அரசியல் மாற்றம் ஏற்படும்போது ஓ.பி.எஸ். - ஈ.பி. எஸ். போன்றோர் எங்களுடன் இணைவார்கள் என்றார் தீபா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications