ஐடி ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது.. ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் தீபா கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடைபெறும் போது ரெய்டு நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார் தீபா

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூற முடியாது. இது தேவையற்றது. ஜெயலலிதாவை கொடுமைக்கு ஆளாக்கியவர்களை வேறு விதமாக பழிவாங்கலாம். ரெய்டு தேவையற்றது என்றும் கூறியுள்ளார் தீபா.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். வெளியூர் சென்றிருந்த நேற்று இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மலர் தூவி வணங்கினார். வழக்கமாக சல்வார், சுடிதாரில் ஊடகங்களின் முன் தோன்றும் தீபா ஜீன்ஸ் பேண்ட், சட்டை அணிந்து வந்திருந்தார்.

மாதவன் இல்லையே

மாதவன் இல்லையே

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீபா உடன் இணைந்தார் மாதவன். தீபாவிற்கு பிஏவாக மாறினார் மாதவன். இதனையடுத்து வேலூரில் பொதுக்கூட்டம் எல்லாம் நடத்தினார். அங்கேதான் ஏதோ சண்டை என்று பேசிக்கொண்டார்கள். மாதவன் இல்லாமல் மீண்டும் வெளியே வரத் தொடங்கியுள்ளார் தீபா.

அரசுக்கு ரெய்டில் தொடர்பில்லை

அரசுக்கு ரெய்டில் தொடர்பில்லை

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தமிழக அரசுக்கும் இந்த ரெய்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது ரெய்டு நடக்கவில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மட்டும் தான் ரெய்டு.

மத்திய அரசு ஆதாயம்

மத்திய அரசு ஆதாயம்

இது நிச்சயம் அரசியல் உள்நோக்கம் கொண்டதுதான். அரசியல் மாற்றங்கள் ஏற்படும் சூழலில் இந்த ரெய்டு நடத்துவதால் மத்திய அரசு ஆதாயம் அடைய பார்ப்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவை கொடுமை படுத்தியவர்கள் மீது வேறு விதமாக பழிவாங்கலாம்.

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை

வெளியூருக்கு சென்றிருந்த காரணத்தால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை . வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும்கட்சி நிவாரண உதவி, பாதுகாப்பு நடவடிக்கை என்று எதுவும் எடுக்கவில்லை என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J Deepa has said that IT Raids in the premises of Sasikala and Dinakaran's relatives are politically motivated.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற