சென்னையில் குவியும் ஆதரவாளர்கள்.. சசிகலாவை எதிர்க்க தீபா தொடர் ஆலோசனை! கிளைமேக்ஸ் நெருங்குகிறது?
தன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி தீபா அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார்.
சென்னை: அதிமுகவுக்கு தலைமையேற்க வரும்படி, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கையுடன் பலரும் சென்னையில் குவிந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சீனியர் நிர்வாகிகளால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.
ஜெயலலிதாவை போன்ற தோற்றம்-குரல் கொண்ட அவரின் அண்ணன் மகள் தீபாவே அதிமுக தலைமையேற்க வேண்டும், அல்லது எதிர்த்து நின்று களமாட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

தொண்டர்கள்
தினமும் தீபாவின் சென்னை தி.நகர் இல்லத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ஆண்-பெண் தொண்டர்கள் குவிந்து அவரை அரசியலுக்கு அழைத்தவண்ணம் உள்ளனர். இதையடுத்து, தன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி தீபா அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார். இதன் முதல்கட்டமாக இன்று மாலை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தீபாவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஈரோட்டில் கட்சி
ஈரோட்டில்தான், முதல் முறையாக, தீபா பெயரில் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இரட்டை ரோஜா சின்னம், கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடியை அறிமுகம் செய்து, தீபாவை பொது செயலராக முன் மொழிந்து, ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளன.

நிர்வாகிகள் வருகை
இந்த தீர்மானங்களை, தீபாவிடம் ஒப்படைத்து, புதிய கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என, அழைப்பு விடுக்கவும், தீபாவை நேரில் சந்திக்கவும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.

பல ஊர்கள்
இதேபோல, மேலும், பல ஊர்களில் இருந்தும் ஆதரவாளர்கள் சென்னைக்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்திய பின், எம்.ஜி.ஆர். பிறந்த நாள் அன்று, அதாவது வரும் 17ம் தேதி, தீபா தனது முடிவை அறிவிக்க உள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications