படகு சின்னம் கிடைத்ததே ஆர்.கே. நகரில் தீபா ஜெயிக்கத்தான்... அடடே மாதவன்
ஆர்.கே.நகரில் படகுச்சின்னத்தில் போட்டியிடும் தீபா எளிதில் வெற்றி பெறுவார் என்று அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி, அங்கே படகு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தீபா எளிதாக வெற்றி பெறுவார் என்று அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார்.
தீபா கேட்டுக்கொண்டால் அவரை ஆதரித்து ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்வேன் என்றும் மாதவன் கூறியுள்ளார்.
தீபாவின் கணவர் மாதவன். கடந்த சில மாதங்களாக தமிழக மக்களுக்கு அறிமுகமானவர். அவ்வப்போது தீபா உடன் தலை காட்டியவர் திடீரென தீபா உடன் கோவித்துக்கொண்டு தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறினார்.

சுற்றுப் பயணம்
புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்த மாதவன் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆங்காங்கே ஹோட்டல்களில் ஆலோசனை நடத்தி வருகிறார்.திருச்சி மாவட்டம் முசிறி எஸ்.பி.திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாதவன், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

தீபாவை முதல்வராக்குவேன்
தீபாவை முதல்வர் ஆக்குவதற்காகவே நான் புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் என்றார். கட்சி தொடங்கிய உடன் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் மாதவன் கூறினார்.

பதவி ஆசையில்லை
எனக்கு பதவி மீது ஆசை கிடையாது. கட்சி தொடங்குவது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து வருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள் என்றார்.

வெற்றிச்சின்னம் படகு
ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி. இதனால் படகு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தீபா எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறிய மாதவன், தீபா அழைத்தால் தான் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications