5 மாநில சட்டசபைத் தேர்தல்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம்.. லக்கானி பங்கேற்பு
சென்னை: டெல்லியில் தமிழகம் உட்பட ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்றுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், மே 22ம் தேதிக்குள், சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், இன்று முதல் இரண்டு நாட்கள் டெல்லியில் மேற்கூறிய ஐந்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான இன்று, ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய, சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குறித்து, ராஜேஷ் லக்கானி விளக்குகிறார்.
இரண்டாம் நாளான நாளை சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும், மத்திய போலீஸ் படை, துணை ராணுவ வீரர்கள் எவ்வளவு பேரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இது மட்டுமின்றி, இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, எந்தத் தேதியில் நடத்துவது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications