டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் வார்னிங்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் விளை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வானிலை மையம் தகவல்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய அதிகாரி பாகுலேயன் தம்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.

பரவலாக மழை பெய்யும்
அப்போது பேசிய அவர் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையான மன்னார் வளைகுடாவில் இருந்து வடதமிழகம் வரை நீடிப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை
டெல்டா, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications