மேட்டூர் அணையை திறக்கக் கோரி 20-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல்!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: ஒருபோக சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி வரும் 20-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
காவிரியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு நீரை திறந்துவிட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஒருபோக சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வலியுறுத்தி வரும் 20-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications