வங்க மொழி திணிப்பை எதிர்த்து.. தனி மாநிலத்தை கேட்டு.. கூர்க்கா இன மக்கள் சென்னையில் போராட்டம்
கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன் வைத்து சென்னை பெசண்ட் நகரில் கூர்க்கா இன மக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை: கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழும் பகுதியை பிரிந்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலத்தை அமைக்க கோரி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வரும் கூர்க்காலாந்து மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் வழங்க வேண்டும் என்ற கோரி வருகின்றனர். அங்கு கடந்த 15 நாட்களாக கூர்க்காலாந்து மாநிலம் கேட்டு நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் கூர்க்கா இன மக்கள், தங்களுக்கு தனி மாநிலம் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி மாநிலக் கோரிக்கை
மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வரும் தங்களை வங்க மொழி கற்க வேண்டும் என்று மாநில அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் தங்களது தாய்மொழியை இழக்க வேண்டி வரும் என்று கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் போராட்டம்
கூர்க்காலாந்தை தனி மாநிலமாக பிரித்து தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெறுவது போன்றே சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது. கூர்க்கா இன மக்கள் சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை போன்ற இடங்களிலும் வசித்து வருகிறார்கள்.

வங்க மொழி திணிப்பு
இந்தி மொழியை மத்திய அரசு கட்டாயமாக்கிய போது, மேற்கு வங்க மொழியான வங்காள மொழியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கட்டாயமாக்கினார். 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு செல்லக் கூடியவர்கள் 10ம் வகுப்பில் கட்டாயமாக வங்காள மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூர்க்கா இன மக்கள் மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு அளித்து சென்னையில் உள்ள அவ்வின மக்களும் போராட்டத்தை நடத்தினார். சென்னை நடைபெற்ற போராட்டத்தில் வங்க மொழி திணிப்பிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications