கோடையால் மின்சார பயன்பாடு 12% அதிகரிப்பு.. தேவை நேரத்தில் மாறுபடும் கோவை, சென்னை
சென்னை: இந்த கோடை காலத்தில் கோவையில் மின்சார தேவை மளமளவென அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கோடை தொடங்கியதும், ஏசி, ஏர் கூலர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின் தேவையும் கூடியுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் இரவு நேரத்தில்தான் அந்த நாளைக்கான மின் தேவை மிகவும் அதிகரிக்கும். ஆனால் கோவையில், மாலையில்தான் அந்த நாளுக்கான உச்சபட்ச தேவை நிலவுகிறதாம்.

கடந்த மார்ச் மாதம் நாள் ஒன்றுக்கு 40 மில்லியன் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட கோவையில், இவ்வாண்டு மார்ச் மாதம் 44 மில்லின் யூனிட் பயன்படுத்ப்பட்டுள்ளது. 12 விழுக்காடுக்கான தேவை கூடியுள்ளது. இதுவே கோடை தவிர்த்த மாதங்களில் நாள் ஒன்றின் மின்தேவை 38 மில்லின் யூனிட்டுகளாக இருந்துள்ளது.
தொழிற்சாலைகள் மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும்கூட, கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் 10 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications
