ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து - இன்னொரு லட்டு திங்க ஆசையா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் அதிகரித்துள்ளன.
சென்னை: ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. தேர்தல் ரத்து அறிவிப்புக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட்கள், பதிவுகள், மீம்ஸ்கள் அதிகரித்துள்ளன. டுவிட்டரில் ஆர்.கே. நகர் டிரெண்ட் ஆகியுள்ளது.
நேர்மையான சூழல் நிலவும் போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது என்று அறிவிக்கவில்லை.
ஒரு தொகுதியில் எம்எல்ஏ இறந்த பின்பு அல்லது பதவி விலகிய பின்னர் 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. ஜெயலலிதா மரணமடைந்து 4 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் 2 மாதத்திற்குள் மீண்டும் இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதால் அந்த தொகுதி மக்களுக்கு மீண்டும் பணமழை பொழியும் என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.
|
நாலைந்து தீபாவளி
ஆர். கே நகர் வாசிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்குள் 3 தேர்தல் நடந்து விட்டது. அந்த தொகுதிமக்களின் காட்டில் பணமழைதான். இப்போது தேர்தல் ரத்தாகியுள்ளதால் இந்த வருடம் நாலைந்து தீபாவளி வரும் போல!! என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
வேலை எதுக்கு?
ஆர்.கே.நகர் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். பிரச்சாரம், பணவிநியோகம் என்று களைகட்டும். பேசம வேலை தேடுறதுக்கு பதிலா ஆர்.கே.நகர் ல ஒரு ஓட்டர் ஐ.டி வாங்குனா போதும் போலயே என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
ஜனநாயகம் வென்றது
தேர்தல் ரத்து அறிவிப்புக்கு பலரும் தேர்தல் ஆணையத்தை பாராட்டியுள்ளனர். பணநாயகம் தோற்றது. ஜனநாயகம் வென்றது என்று கூறி பதிவிட்டுள்ளனர்.
|
ஜனாதிபதி ஆட்சி
இடைத்தேர்தலை ரத்து செய்வது மட்டும் போதாது. கூடவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையை நீக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும், கூடவே ஜெயலலிதாவின் சொத்துக்களை மீட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
|
இன்னொரு லட்டு திங்க ஆசையா?
ஆர். கே நகரில் மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால் இன்னொரு லட்டு திங்க ஆசையா என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
இன்னொரு 4000 கிடைக்கும்?
ஒரு ஓட்டுக்கு 4000 கொடுத்ததால் இடைத்தேர்தல் ரத்து, மீண்டும் இன்னொரு 4000 கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று கேட்டு பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications