ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு மத்திய அரசுதான் காரணம்- 'ஒன்இந்தியா' நடத்திய மெகா சர்வே ரிசல்ட் இதோ
சென்னை: ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் உத்தரவு குறித்து மாபெரும் ஆன்லைன் சர்வே நடத்தியது 'ஒன்இந்தியா'.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி மொழி ஒன்இந்தியா வெப்சைட் வாசகர்கள் இக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தனர். 31198 பேர் வாக்களித்ததன் மூலம், ஆன்லைன் வாக்களிப்பில் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது இந்த கருத்துக் கணிப்பு.
ரூபாய் ஒழிப்பு தொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து ஒன் இந்தியா தமிழ் சர்வே நடத்தப்பட்டது. சாமானியர்கள் சந்திக்கும் ரூபாய் நோட்டு பிரச்சனைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு அரசுதான் என்று 53.9% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கிக்கும் பங்கு
அடுத்தபடியாக, சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு ரிசர்வ் வங்கியே காரணம் என 27.6% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்றாவதாக, சாமானியர்கள் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு வங்கிகள்தான் காரணம் என 18.5% கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு அடிப்படையில், அரசுதான் என கூறியவர்கள் மொத்தம், 13099 பேராகும். வங்கிகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்போர் 4510. ரிசர்வ் வங்கிதான் காரணம் என்போர் 6713 பேராகும்.

கூட்டம்
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதன்பிறகு வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.

கேள்விக்கான அவசியம்
பணம் எடுக்கும் முயற்சியின்போது, இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், குழப்பத்திற்கு யார் காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications