கைவிரிக்கும் வங்கிகள்... செயல்படாத ஏடிஎம்கள்... அல்லாடும் மக்கள்!
சென்னை: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான ரூ 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் மக்கள் பணத்துக்காக வங்கிகள், ஏடிஎம்கள் என அலையும் நிலை தொடர்கிறது.
குறிப்பாக திங்கள் கிழமை நிலைமை படு மோசமாகிவிட்டது.
எந்த வங்கியிலும் போதிய பணமில்லை. நாட்டின் 99 சதவீத ஏடிஎம்கள் செயல்படவில்லை. பல ஏடிஎம்கள் முழுவதுமாக மூடப்பட்டுக் கிடந்தன.

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிர்ணயிக்கப்பட்டதைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணம் வழங்கப்பட்டது.
குறிப்பாக, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவற்றில் வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே அளிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கிக்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. இதனால், வங்கிக் கிளைகளுக்கு பணம் விநியோகம் செய்யப்படவில்லை.
போர்க்கால அடிப்படையில் வங்கிகள் செயல்படும், டிசம்பர் 31 வரை சனி, ஞாயிறுகளில் விடுமுறையே கிடையாது என அறிவிக்கப்பட்டாலும், அதெல்லாம் வெறும் அறிவிப்பாகவே போய்விட்டது.
சனி, ஞாயிறு விடுமுறை என்ற காரணத்தைக் காட்டித்தான் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பவில்லை. திங்களன்று நள்ளிரவு வரை ஒவ்வொரு ஏ.டி.எம் மையமாக பொது மக்கள் தேடி அலைந்தனர்.
திங்கள்கிழமை காலை வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலர் காசோலைகளை நிரப்பி வங்கிக் கிளைகளில் கொடுத்த போது அவர்களுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை. அதிகபட்சம் ரூ 5000 மட்டும்தான் வழங்கப்பட்டது. காசோலைகள் ரூ 24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, நடப்புக் கணக்கு, மேல் வரை கணக்கு ('ஓவர் டிராப்ட்') உள்ளிட்ட இதர கணக்கு வைத்துள்ளோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே அளிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் பலரும் கடும் அதிருப்தி ஆவேசத்துடன் திட்டிக் கொண்டு சென்றதைப் பார்க்க முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications