பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொடர் போராட்டம்.. கிராம மக்கள் அதிரடி!
பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு: வரும் 26-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 50 க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து ஒரு சொட்டு கழிவு நீர்கூட வெளியேற்ற கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் கழிவு நீரை திறந்து விடுகின்றனர் என்பது பொது மக்களின் புகார்.

மேலும் ஆழ்துளாய் கிணறுகளில் இந்த கழிவுநீரை விடுவதால் சிப்காட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள நீரை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளதோடு பொதுமக்களுக்கும் புற்றுநோய், சுவாசகோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிகளிடம் பலமுறை மனு அளித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கம்.
இந்தநிலையில் சிப்காட்டை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நலச்சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் முதற்கட்டமாக வரும் 26-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களின் இந்த முடிவு தொழிற்சாலை உரிமையாளர்கள் கலக்கமடைய செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications