யோகாசனம் மூலம் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்!
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் டெங்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மாணவர், மாணவியர்களின் யோகாசன நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா, இன்டர்நேசனல் நேச்சுரோபதி ஆர்கனைசேசன் ஆகியவை சார்பில் மகாகவி பாரதி மணிமண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஓருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். இன்டர்நேசனல் நேச்சுரோபதி ஆர்கனைசேசன் தலைவர் பிராங்கின், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் எஸ்.பி.எம்.ராஜா, எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி வழக்குரைஞர் முருகானந்தம், தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் இளசை மணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு டெங்குநோய் தடுப்புமுறைகள் குறித்துப் பேசினர்.
இதையொட்டி நடைபெற்ற யோகாசனப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், கசவன்குன்று ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி, கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி, மாகாத்மா காந்தி தொடக்கப்பள்ளி, தூத்துக்குடி எஸ்.டி.ஆர். தொடக்கப்பள்ளி, பாரத் தொடக்கப்பள்ளி மற்றும் கோல்டன் தொடக்கப்பள்ளி மாணவர், மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், தூத்துக்குடி பாரத் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் முதல் பரிசை வென்றனர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள்
விஜயலட்சுமி, அந்தோனி முத்துராஜ், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர்கள் ஜோசப்ராஜ், சரவணசாமி, கருப்பசாமி, பாரதி முற்போக்கு வாலிபர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் முத்துகுமார் உள்ளிட்ட மாணவர், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்டர்நேசனல் நேச்சுரோபதி ஆர்கனைசேசன் மாநிலப் பொருளாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். கோவில்பட்டி ஜீவஅனுகிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications