ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சல்: 9 மாத குழந்தை உட்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவிலிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு கய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் மற்றும் விழுப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்கங்களுக்கு முன் இங்கு பரவிய டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 3 குழந்தைகள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அப்பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 9 மாத குழந்தை டோனி உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications