4 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பினார் மாயமான சென்னை மாடல் நடிகை! போலீசார் தீவிர விசாரணை
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை மாயமான மாடல் நடிகை கானம் நாயர் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை: சென்னையில் விளம்பரப் படங்களில் நடித்து வந்த மாடல் கானம் நாயர் காணாமல் போன நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் கானம் நாயர், விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் புகைப்பட கலைஞராகவும் கானம் செயல்பட்டு வந்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அழகுக்கலை நிலையத்திலும் கானம் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ந் தேதி தனது கருப்பு நிற ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு சென்றவர் மாயமாகியுள்ளார்.

3 நாட்களாக காணவில்லை
அன்றைய தினம் அவர் அழகுக்கலை நிலையத்திற்கும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் கானத்தின் செல்போனும் அன்றைய தினமே ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் அவரை கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

போலீசில்
இந்நிலையில் சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் இளம் பெண் கானம் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்
காணாமல் போன கானம் நாயரின் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இது குறித்து எந்தத் தகவலும கிடைக்கவில்லை. இதனால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்று வழி
இதனிடையே கானம் நாயர் வழக்கமாக தான் அலுவலகம் செல்லும் பாதையில் போகாமல் காணாமல் போன தினத்தன்று வேறு பாதையில் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. 28 வயது இளம்பெண் காணாமல் போய் 3 நாட்கள் ஆன நிலையில் அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாததால் அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வீடு திரும்பினார்
இதனையடுத்து போலீசாரிடம் தொலைபேசியில் பேசிய கானம் நாயர் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிற்பகலில் தனது இல்லத்திற்கு வந்த கானம் நாயர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளளனர். கானம் நாயர் 4 நாட்களாக எங்கே சென்றார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications